உக்ரைனைப் பாதுகாக்க இத்தாலிய செனட்டர்களின் நூதனத் திட்டம்
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க, இத்தாலிய மீன்பிடி நிறுவனங்கள் தங்களின் பழைய வலைகளை தானமாக வழங்க ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை இத்தாலிய செனட் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை முன்மொழிந்துள்ளனர்.
உக்ரைன் போர்க்களங்களில் மருத்துவமனைகள், உள்கட்டமைப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் வீதிகளுக்கு மேலாக இந்த வலைகளைக் கட்டி, ரஷ்ய ட்ரோன்களின் ஊடுருவலைத் தடுக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மரணத்தை ஏவும் நவீன ஆயுதங்களுக்கு
இந்த வலைகள் ட்ரோன்களின் இறக்கைகளில் (Propellers) சிக்கி, அவை இலக்குகளை அடைவதற்கு முன்பாகவே அவற்றைப் செயலிழக்கச் செய்யும் எளிய ஆனால் பயனுள்ள பாதுகாப்பு கருவியாகச் செயல்படுகின்றன.

இத்தாலிய விவா (Italia Viva) கட்சியின் செனட்டர் இவான் ஸ்கால்ஃபரோட்டோ (Ivan Scalfarotto) இது குறித்துக் கூறுகையில், "மத்திய தரைக்கடலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் மீன்பிடி வலைகள், தற்போது மரணத்தை ஏவும் நவீன ஆயுதங்களுக்கு (ட்ரோன்கள்) எதிரான சிறந்த தற்காப்பு அரணாக மாறியுள்ளன" என்றார்.
இந்த புதிய மசோதாவின்படி, உக்ரைனுக்கு வலைகளை அனுப்பும் மீன்பிடி நிறுவனங்களுக்கு, அந்த வலைகளை அப்புறப்படுத்துவதற்கான (Disposal) செலவுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
உக்ரைனின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த
மேலும், அவர்கள் வழங்கும் வலையின் எடைக்கு ஏற்ப அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
நெதர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் ஏற்கனவே இத்தகைய வலைகளை உக்ரைனுக்கு அனுப்பி வரும் நிலையில், இத்தாலியும் இந்த முயற்சியில் இணைய உள்ளது.

இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அரசாங்கம் இதுவரை உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட 12 உதவித் தொகுப்புகளை வழங்கியுள்ளது.
தொழில்நுட்ப ரீதியான ஆயுதங்களுடன் இத்தகைய அடிப்படை வசதிகளையும் இணைப்பதன் மூலம் உக்ரைனின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த முடியும் எனச் செனட்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri