உலக சந்தையில் எரிபொருள் விலையை தலைகீழாக மாற்றும் ட்ரம்பின் அறிவிப்பு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.
கச்சா எண்ணெய் விலை
ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது.

உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.
ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri