மீண்டும் அரசாங்கத்தில் இணையுங்கள்: கோட்டா விடுத்துள்ள அழைப்பு - செய்திகளின் தொகுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி நேற்று முன்தினம் தம்மைச் சந்தித்தபோது இந்த அழைப்பினை விடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
தங்களை மீண்டும் அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்காத பட்சத்தில் தாங்கள் அவ்வாறு செய்ய முன்வந்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,