உலக நாடுகளை உலுக்கிய ஒடிசா தொடருந்து விபத்து! பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு
உலக நாடுகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா தொடருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
நேற்றிரவு கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ்தொடருந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த சரக்கு தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தற்போது வரை 294 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்
இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்திற்கு இதுவரை இதற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லையெனவும், இந்த விவகாரத்தில் உடனடியாக ரயில்வே அமைச்சரை இராஜினாமா செய்ய பிரதமர் வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் என்ற தொடருந்து பாதுகாப்பு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவில்லையெனவும், இதுவே விபத்திற்கான காரணம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |