நல்லூரில் ஆபத்தை ஏற்படுத்தும் பாதை தடை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
புதிய இணைப்பு
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பண கிளையில் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளரும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் ஆணையாளர் சார்பில் அத்திணைக்களத்தின் விசாரணை அதிகாரியும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாநகர சபை
இதன்போது கருத்துதெரிவித்த யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர்,
“இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் தரப்பினரிடமும், நல்லூர் ஆலய நிர்வாகத்திடமும் கலந்துரையாடி பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் மற்றும் ஆபத்துகள் ஏற்படாத வகையில் வீதி தடைகள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் யாழ் மாநகர சபை ஆணையாளரின் நடவடிக்கையினை அடுத்து எமது மேலதிக கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட முறைபப்பாடு தொடர்பில் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்துப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
எனவே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ,இன்று (09.08.2024) மு.ப. 11.30 மணிக்கு இல 42, கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு இத தொடர்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |