நுவரெலியா - நில்தண்டாஹின்ன பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
நுவரெலியா - வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நில்தண்டாஹின்ன பகுதி இன்று (02.05.2021) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று வலப்பனை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நில்தண்டாஹின்ன கிராம சேவக பிரிவிற்குட்பட்ட 4 பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் பலருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
இந்நிலையிலேயே வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் நில்தண்டாஹின்ன முடக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், நபர்கள் உள்ளே வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ளவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
