இலங்கையில் முதலீடு செய்ய முன் வாருங்கள்!பிரதமர் ஹரிணி அழைப்பு
இலங்கை, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச உறவுகள் மீது அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு நம்பகத்தன்மை மிக்க கூட்டுறவு நாடாகும்" என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நேற்று(28.5.2026) ஆரம்பமான “இலங்கை - ஜேர்மன் வர்த்தக மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளின் ஊடாக இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் கூட்டாண்மை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் கூறினார்.
பொருளாதார பரிவர்த்தனை
குறிப்பாகத் தொழிற்பயிற்சி, தொழிற்கல்வி, புத்தாக்க வலுசக்தி மற்றும் பொருளாதார பரிவர்த்தனை ஆகிய துறைகளில் ஜேர்மனி வழங்கி வரும் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
தற்போது இலங்கை, பேரினப் பொருளாதார நிலைத்தன்மையையும், கூடுதல் போட்டித்தன்மை மிக்க பொருளாதார மாதிரியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அரசு நிதி ஒருங்கிணைப்பு, கட்டமைப்பு சீரமைப்புகள் மற்றும் நல்லாட்சிசார் சீர்திருத்தங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இச்செயல்முறைகளின் போது பெண்கள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சமூகங்கள் மீது ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் தொடர்பில் அரச விசேட கவனம் செலுத்தி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.




அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam