பிள்ளையான் விவகாரத்தில் சிஐடி அழைக்கும் வரை காத்திருக்கும் நாமல்..
பிள்ளையான் விவகாரம் தொடர்பில் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினர் அழைக்கும் வரை காத்துக் கொண்டிருப்பதாக பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் வைத்து நேற்று(28) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..
விசாரணை...
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியையும் ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இந்த அரசாங்கம் எம்மைப் பின்தொடராமல், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது, கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருக்கும் பிள்ளையான் விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைக்காக என்னை அழைக்கும் வரை நான் காத்திருக்கின்றேன். நானும் பல கேள்விகளை விசாரணை அதிகாரிகளிடம் கேட்கவிருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டுக்குச் சென்று நபரொருவரிடம் சாட்சியம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட ஒருவர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒர நபரை தூதரகத்திற்கு அழைத்து எவ்வாறு பேச முடியும் எனவும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam