பேஸ்புக் நேரலையில் நிகழ்ந்த மரணம் - தீவிர விசாரணையில் பொலிஸார்
முகநூல் நேரலையின்போது உயிரிழந்த, கரன்தெனியவின் தல்கவத்த பகுதியைச் சேர்ந்த 35 வயது நபரின் மரணம் குறித்து கரன்தெனிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இறந்தவரான தினேஷ் விஜேவர்தன, பல ஆண்டுகளாக தென்கொரியாவில் பணியாற்றி, அண்மையில் இலங்கை திரும்பியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
119 என்ற அவசர உதவி எண் மூலம்
பொலிஸாரின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் ஜூலை 12 ஆம் திகதி இரவு நிகழ்ந்துள்ளது.

நேரலை ஒளிபரப்பின் போது, அவர் தவறான முடிவெடுப்பதற்கு முன்பு ஆரம்பத்தில் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
119 என்ற அவசர உதவி எண் மூலம் முறைப்பாடு வந்ததையடுத்து விசாரணையைத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சடலம் எல்பிட்டிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
you may like this video
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan