இலங்கையை உலுக்கிய நானுஓயா கோர விபத்து! அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையை உலுக்கிய நானுஓயா விபத்து
கடந்த 20ம் திகதி நானுஓயா - ரதெல்ல பகுதியில், கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் 51 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த விபத்தில் நானுஓயா பகுதியில் சுயதொழில் ஈடுபடும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் முச்சக்கர வண்டி சாரதியும்,வான் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வானில் பயணித்த தாய், தந்தை, இரு பிள்ளைகள், உறவினர் ஒருவர் மற்றும் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், முச்சக்கரவண்டி சாரதி நானுஓயா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


