மகிந்த தரப்பு மீது கை வைக்க முடியாத அரசாங்கம்.. அர்ச்சுனா ஆதங்கம்
மஹிந்த ராஜபக்ச போன்றவர்கள் மீது கை வைக்க முடியாத அரசாங்கம் தம்மை கைது செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
நான் பிரபாகரனை தெய்வமாக பார்க்கின்றேன் அதுவே என் நிலைப்பாடு அதே போன்று சிங்கள மக்கள் மஹிந்த தெய்வமாக பார்த்தார்கள் என தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினர்
எனினும் இந்த நாட்டின் சிங்கள மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்து விட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் திருடர்கள் என குற்றம் சுமத்தப்பட்டது நானும் அந்த குற்றச்சாட்டுகளை நம்பினேன் என தெரிவித்துள்ளார்.
இது ஒரு பொய்யுரைக்கும் அரசாங்கம் பல பொய்களை உரைத்துள்ளது உண்மையில் தவறிழைத்திருந்தால், திருடி இருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என அர்ச்சுனா கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று எனக்காக இங்கு எனது சகோதரி மட்டுமே வந்து இருந்தார் எனவும் தமக்கு தாய் தந்தை யாரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாமல் ராஜபக்ஷ இங்கே எனக்காக வந்திருந்தார் நான் அவரை மதிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நான் நாமல் ராஜபக்சவிற்காக குரல் கொடுக்கின்றேன் இங்கே வெறுமனே குழந்தைகள் போல் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் பலன் இல்லை என தெரித்துள்ளார்.
எங்களைத் தவிர வேறு யாரையும்
நாடாளுமன்றில் என்னை தும்புத்தடி என சிலர் அழைக்கின்றனர் எனவும் உடல் பருமனைக் கொண்டு இவ்வாறு அழைப்பதாக கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.
யார் தும்புத்தடி யார் மருத்துவர் என்பதை எல்லோருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச போன்ற தலைவர்களின் மேல் கை வைக்க முடியாது என்பதால் எம்மை போன்ற நெத்திலிகள் மீது கை வைக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
சாமர சம்பத் தசநாயக்கவை கைது செய்வார்கள் அல்லது தம்மை கைது செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு எங்களைத் தவிர வேறு யாரையும் எதையும் செய்ய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு நாங்கள் இருவரும் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது எனவும் இதுவே உண்மை எனவும் தெரிவித்துள்ளார்.



