மலையகத்தில் அமைத்த காரியாலயங்களை தேடும் தொண்டமான்: சாடிய ஆளும் தரப்பு எம்.பி
தொண்டமான் நுளம்பு வலைகளை தூசு தட்டி விட்டு மலையகத்தில் அமைத்த காரியாலயங்களை தேடிகொண்டு இருப்பதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவ பிரதேசத்தில் நேற்றையதினம்(09) தேசிய மக்கள் சக்தியின் கட்சி காரியாலயத்தை திறந்து வைத்து மக்கள் முன் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தொண்டமான் காரியாலயத்தை திறப்பார்கள். ஆனால், மீண்டும் 5 வருடங்கள் கடந்த பின் வந்து தேடுவார்கள். நாங்கள் மூடவில்லை, திறக்கின்றோம். இதுதான் மாற்றம்.

அரச அதிகாரி ஒருவருக்கு அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய கடிதம்.. விடுதலைப் புலிகளை வைத்து பழிவாங்கும் செயல்
அத்தியாவசிய பொருட்களின் விலை
நாங்கள் தெளிவான ஒரு பயணத்தை நோக்கி முன்னோக்கி செல்கின்றோம். சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை போல் வங்குரோத்து அடைந்த எமது நாட்டையும் மாற்றியமைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது 300 ரூபாவிற்கு டொலரின் விலையினை கொண்டு வந்துள்ளோம். கடந்த காலங்களில் டொலரின் விலை, காலையில் 300 ரூபாய் என்றால் மாலை 400 ரூபாவுக்கு அதிகரிக்கும்.
எரிபொருளின் விலை அதிகரித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. இறுதியில் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகினர்.
எமது அரசாங்கத்தில் அவ்வாறு அல்ல. டொலரின் விலை அதிகரிக்கவில்லை. இது சாதாரண விடயமல்ல. இது தான் நாட்டை பாதுகாப்பதென்பது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




