தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு ஊழல் செய்வதில் அனுபவமில்லை! சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு
எதிர்கட்சிகள் சொல்வது போல் தேசிய மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுபவம் இல்லை என்பது உண்மை தான் என பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
நேற்றையதினம்(2.1.2026) இரவு கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்கட்சிகள் சொல்லும் அனுபவம் எங்களிடம் இல்லை.கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது,குடும்ப அரசியலை கொண்டு செல்வது இதிலே எங்களுக்கு அனுபவம் இல்லை.
அரசியல் வாழ்க்கை
ஆனால் மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும், எந்த முறையிலே சேவை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்திற்கு புதிது என்றாலும் கூட தேசிய மக்கள் சக்தியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசியல் வாழ்க்கையில் பல வருட அனுபவங்களை கொண்டிருக்கின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக சரியான முறையிலே நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்கள் எங்களோடு இருக்கிறார்கள், நாங்கள் மக்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறோம்.
எதிர்க்கட்சி எங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கட்டும். நாங்கள் மக்களுக்கான சேவையை தொடர்ச்சியாக செய்து கொண்டிருப்போம்.மக்கள் என்றும் எங்கள் பக்கமே என அவர் தெரிவித்தார்.