படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்!

Sri Lanka Army Jaffna Kilinochchi Nagalingam Vedanayagam
By Kajinthan Feb 03, 2026 06:05 AM GMT
Report

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று(3.2.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை இன்று சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தமிழ் மக்களின் சரித்திரத்தில் முக்கிய திருப்புமுனையாகும் கிபுல்ஓயா திட்ட போராட்டம்! எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களின் சரித்திரத்தில் முக்கிய திருப்புமுனையாகும் கிபுல்ஓயா திட்ட போராட்டம்! எம்.ஏ.சுமந்திரன்

கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்! | Meet Lands Held By Soldiers In Jaffna Kilinochchi

பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாகவும் ஆளுநரால் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், பாதுகாப்புத் தரப்பினர் கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

காணி விடுவிப்பு

இதேவேளை, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் (03.02.2026) காலை 09.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு மற்றும் டித்வா அனர்த்தத்தின் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபருடன் விரிவாக கலந்துரையாடினார்.

படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்! | Meet Lands Held By Soldiers In Jaffna Kilinochchi

இதன்போது, பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ராசிக் மற்றும் கேணல் நிஷங்க ஆகியோரும் பங்குபற்றினார்கள்.

மேலும், அரசாங்க அதிபருடனான சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  பா.ஜெயகரன், பிரதம கணக்காளர்எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி ஆகியோரும் உடனிருந்தார்கள்.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு! இலங்கையிலும் மாற்றம் - வெளியான பின்னணி

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவு! இலங்கையிலும் மாற்றம் - வெளியான பின்னணி



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US