வைத்தியர்களுக்கான ஓய்வு வயது தொடர்பில் வெளியான அறிவிப்பு
சுகாதாரத் துறையின் வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் முயற்சியில், வைத்திய நிபுணர்கள் 63 வயதில் ஓய்வு பெற்றதன் பின்னரும் அவர்களது ஒப்பந்தம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு தற்போதுள்ள ஓய்வுபெறும் வயது 63க்கு மேலதிகமாக அவர்களின் விருப்பத்திற்கேற்ப சேவையைத் தொடர அனுமதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை எதிர்கொள்ளும் சவால்கள்
இந்த பிரேரணை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிப்பதற்காக குறிப்பு ஒன்று சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பொதுச் சேவையினருக்கான ஓய்வு வயது 60 ஆக இருக்கும் அதே வேளையில், சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வைத்தியர்களின் வெளியேற்றம் காரணமாக ஓய்வு வயது 63 ஆக நீடிக்கப்பட்டது.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 16 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri