மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபானசாலைகளை மூட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் வாரம்
அத்துடன் எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுபானசாலைகளை 3 நாட்களுக்கு மூடுவது தொடர்பில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri