தலாய் லாமாவின் இலங்கை விஜயத்தை எதிர்க்கும் சீனா
திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் (Dalai Lama) இலங்கை நாட்டிற்கான விஜயத்தை சீனா (China) தடுத்து வருவதாக இலங்கையின் உயர்மட்ட பௌத்த தலைவர் வஸ்கடுவே மஹிந்தவங்ச (Vaskatuve Mahindawangsa) தெரிவித்துள்ளார்.
புத்தரின் கபிலவஸ்து நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியை தலாய் லாமாவிடம் ஒப்படைப்பதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில், இந்திய ஊடகம் ஒன்றின் பிரத்தியேக நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீனா எதிர்ப்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "நாங்கள் தலாய் லாமாவை மதிக்கிறோம், அவரை இலங்கைக்கு அழைத்தோம், ஆனால் சீனா அதை விரும்பவில்லை. எங்கள் அரசுக்கு எதிராக சீனா அழுத்தம் கொடுத்தது, எங்களுக்கு அது பிடிக்கவில்லை.

அவர் ஒரு பௌத்த தலைவர், அவருக்கு சுதந்திரம் உள்ளது. அழைப்பு விடுக்கும் சுதந்திரம் எமக்கு உள்ளது.” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri