இரத்தக்களரி ஏற்படாதவாறு அரசியலில் ஈடுபடுங்கள்: அனுர தரப்புக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்த நாட்டில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படாதவாறு பொறுப்பான அரசியலில் ஈடுபட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayake) '71 முன்னோடி சோசலிச அமைப்பு' கோரிக்கை விடுத்துள்ளது.
71 முன்னோடி சோசலிச அமைப்பின் தலைவர் கல்யாண கருணாரத்ன இந்த கடிதத்தை கலவெல்லகொட சந்தலோக்க தேரர் ஊடாக அனுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
71ஆம் ஆண்டு கிளர்ச்சியின் 53 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் இரத்தம் சிந்தாமல் இருப்பதற்காக தமது அமைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் எழுச்சிக்கான பின்னணி
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியில் இவ்வாறானதொரு இளைஞர் எழுச்சிக்கான பின்னணி தயாராகி வருவதை அவதானிக்கப்படுகிறது.

அவ்வாறானதொரு நிலை ஏற்படாதவாறு நல்லெண்ணத்துடன் செயற்படுமாறு அனுரவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam