மோடி அரசுக்கு ரணில் வழங்கிய மிரட்டல்
இலங்கை- இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் இரண்டு இந்திய தொலைக்காட்சிகள் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் கேட்ட போது எங்களுடைய எல்லைக்குள் யாராவது வந்தால் தகுந்த தண்டனை வழங்கப்படும் என மோடி அரசுக்கு ரணில் மிரட்டல் விடுத்ததாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்றொழிலாளர்கள் வெறுமனே எல்லைத் தாண்டவில்லை. யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் கடற்றொழில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் கச்சத்தீவு பற்றி ரணில் கூறிய விடயம் 1974 ஆம் ஆண்டு என்ன கடற்றொழில் முறை இருந்ததோ அதற்கே திருப்பி செல்லுங்கள் என்று கூறினார்.
ஆகவே இது இலங்கை கடற்றொழிலாளர்களை கடுமையாக பாதிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |