ஈழ தமிழர்கள் விடயம் தொடர்பாக அமெரிக்காவிற்கு பறந்த கடிதம்

Sri Lankan Tamils Tamils M. K. Shivajilingam United States of America
By Theepan Jan 29, 2026 05:30 PM GMT
Report

ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்கி, எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும் என வல்வெட்டித்துறை நகர சபை நகர பிதா எம்.கே. சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

அமெரிக்கா காங்கிரஸினருக்கு நன்றி தெரிவித்து, அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவ்வாறு கோரியுள்ளார்.

ரணிலை சுற்றி வளைக்கும் வழக்கு விசாரணை - மேல் நீதிமன்றத்தில் மற்றொரு ஆபத்து

ரணிலை சுற்றி வளைக்கும் வழக்கு விசாரணை - மேல் நீதிமன்றத்தில் மற்றொரு ஆபத்து

 தமிழ் இனப்படுகொலை

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஈழவிடுதலை மற்றும் சுதந்திர இயக்கத்தின் புனிதபிறப்பிடமான வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து, எமது வல்வெட்டித்துறை மக்கள் சார்பாகவும், ஒட்டுமொத்த ஈழத் தமிழ் தேசத்தின் சார்பாகவும் அமெரிக்க ஜக்கிய நாடுகளின் காங்கிரஸ் உறுப்பினர்களான ஹெர்பர்ட் சி.கொனாவே ஜூனியர், டொனால்ட் ஜி.டேவிஸ், டேனி கே.டேவிஸ், ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாண்புமிகு சம்மர் எல்.லீ ஆகியோருக்கு எமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈழ தமிழர்கள் விடயம் தொடர்பாக அமெரிக்காவிற்கு பறந்த கடிதம் | Us Urged To Lead On Eelam Tamils Issue

ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்குமாறும், தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மற்றும் நீதியுடன் நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்காக ஒரு பொது வாக்கொடுப்பை நடத்துமாறு வலியுறுத்தி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மாண்புமிகு மார்கோ ரூபியோவை கடந்த 21ஆம் திகதி அன்று எழுதிய கடித்தை முன்னின்று வழிநடத்தியதற்காக இந்த நன்றியைத் தெரிவிக்கிறோம்.

தமிழர்களால் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையும், நிரந்தர அரசியல் தீர்வைக் கண்டறிவதற்காக வடகிழக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின் கீழ் ஒரு பொது வாக்கொடுப்பை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை வலியுறுத்தி, செப்டம்பர் 11,2018 அன்று ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது என்பதை நினைவுகூருவது அவசியமாகும்.

வவுனியாவில் இ.போ.சபை பேருந்து - தனியார் பேருந்து மோதி விபத்து

வவுனியாவில் இ.போ.சபை பேருந்து - தனியார் பேருந்து மோதி விபத்து

ஈழத் தமிழர்களின் இறைமை 

ஒடுக்குமுறை சக்திகளால் வரலாற்று ரீதியாக தீர்வுகளாகத் திணிக்கப்பட்ட கட்டுப்பாடு நிலைமைகளுக்கு உறுதியான எதிர்ப்புத் தெரிவித்து, தமிழர்கள் தமது அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பதற்கு ஒரு பொது வாக்கெடுப்பே மிகவும் பொருத்தமான ஜனநாயக சர்வதேச சட்ட வழிமுறையாகும்.

ஈழ தமிழர்கள் விடயம் தொடர்பாக அமெரிக்காவிற்கு பறந்த கடிதம் | Us Urged To Lead On Eelam Tamils Issue

1619-ஆம் ஆண்டில் போர்த்துக்கேசியர்களால் ஈழத் தமிழர்களின் இறைமை வன்முறையாகப் பறிக்கப்பட்டமை, உலகின் நீண்டகால அநீதிகளில் ஒன்றாக இன்றும் நீடிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, போர்த்துக்கீசிய, டச்சு மற்றும் பிரித்தானிய காலனித்துவ சக்திகளின் கீழ் தமிழ் மக்கள் திட்டமிட்டு அநீதிக்கு உள்ளாக்கப்பட்டனர்.

1948-ல் பிரித்தானியர் இந்தத் தீவை விட்டு வெளியேறியபோது, அவர்கள் தமிழர்களை சிங்களவர்களின் கீழ் பலவந்தமாக ஒப்படைத்து, சிங்களவர்களுக்குச் சுதந்திரம் வழங்கினர். ஆனால் தமிழர்களுக்கு வழங்கவில்லை.

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் மோசமான காணொளி! வெளியான புதிய தகவல்

சர்ச்சைக்குரிய கொழும்பு பிரபல பாடசாலையின் மோசமான காணொளி! வெளியான புதிய தகவல்

வரலாற்று அநீதி

அது ஒரு முறையற்ற, முழுமையற்ற மற்றும் சட்டவிரோதமான காலனித்துவ நீக்கமாகும். ஈழத் தமிழ் தேசம் முழுமையான நீதிக்குத் தகுதியானது அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்காக மட்டுமல்லாமல், போர்த்துகீசியர், சிங்கள சிறிலங்கா டச்சுக்காரர் மற்றும் பிரித்தானியரால் இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளுக்காகவும் நீதி தேவை.

ஈழ தமிழர்கள் விடயம் தொடர்பாக அமெரிக்காவிற்கு பறந்த கடிதம் | Us Urged To Lead On Eelam Tamils Issue

தமிழ் இராச்சியத்தின் அழிவுக்கும், அதன் பின்னர் எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதில் ஏற்பட்ட தோல்விக்கும் இந்தச் சக்திகள் வரலாற்று ரீதியாகப் பொறுப்புக் கூறவேண்டும். அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்கி, எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் உண்மையான விருப்பமும் எங்களுக்கு உண்டு என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US