ரணிலை சுற்றி வளைக்கும் திக்... திக்... நிமிடங்கள் - மேல் நீதிமன்றத்தில் மற்றொரு ஆபத்து
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொது சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்றையதினம்(28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் நேற்றையதினம் (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்றையதினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவரை 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த லண்டன் விஜயத்தின் போது அவர் சாதாரணமாகவே சென்றுள்ளார் என்றும் எந்தவித அரசசார்பான அழைப்பும் அவருக்கு விடுக்கபடவில்லை என்றே கூறப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவிற்கு உரையாற்றுவதற்கு நேரம் வழங்கப்படவில்லை, அரச தலைவர்கள் சந்தித்துக்கொண்ட உத்தியோகப்பூர்வ படங்களும் இல்லை, மேலும் அவர் அமர்வதற்காகவென்று தனியாக ஆசனம் கூட ஒதுக்கப்படவில்லை என்று குற்றத்தடுப்பு புலனாய்வுபிரிவினரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன.
இந்த வழக்கு தொடர்பான 90 சதவீதமான விசாரணை முடிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த வழக்கை இப்படியே விட்டு விட போவதில்லையென்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..