பௌத்த பிக்குவின் செயற்பாட்டால் சிங்கப்பூரில் ஏற்பட்ட களங்கம்!
இலங்கையிலே பௌத்த பிக்கு ஒருவர் நபர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் சிங்கப்பூர் மக்களிடையே ஒரு மதிப்பற்ற தன்மையை ஏற்படுத்தியதாக சிங்கப்பூரில் ஆசிரியர் சேவையில் ஈடுபட்டு வரும் முத்துசுவாமி ஞானதாஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இவ்வாறான சம்பவங்கள் இலங்கையிலே இடம்பெற்றால் எப்படி மக்களை ஏனைய இனத்தவர்கள் மதிப்பார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரைப் போன்று இலங்கை மக்களும் அனைத்து இனத்தவர்களையும் நேசிக்கப் பழக வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேசியமக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் 15 வருடங்கள் ஆட்சி செய்யுமாக இருந்தால் இலங்கை சிங்கப்பூராக மாற வாய்ப்புள்ளதாகவும் முத்துசுவாமி ஞானதாஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையை சிங்கப்பூராக்குவதற்கு இலங்கையர்கள் என்ன செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்ட விடயங்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.