கத்லீன் புயலால் சேவையிழந்த பிரித்தானிய விமானங்கள்
”கத்லீன்” எனப்படும் புயலுடன் கூடிய வெப்பமான காலநிலை காரணமாக பிரித்தானியாவின் (United Kingdom) விமான சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு அமையவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 140 பிரித்தானிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காற்று
மேலும், சீரற்ற காலநிலையால் ஸ்கொட்லாந்தில் (Scotland) உள்ள தொடருந்து மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம், காற்றின் சீரற்ற நிலை காரணமாக இங்கிலாந்தின் (England) வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் (England) ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
