அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
வேலை வாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கமருபீடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கடவுசீட்டை பெறுவதற்காக தற்போது அதிகளவான மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரச்சினைக்கு தீர்வு
இந்நிலையில், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டை பெறுவதற்கு கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனவே குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய கமருபீடம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri