கட்டுநாயக்க விமான நிலைத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல் அம்பலம்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 205 மில்லியன் ரூபாய் பெறுமதியான 9 கிலோ 500 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப் பயணி மற்றும் விமான நிலையத்தின் சுங்க வரியற்ற வர்த்தக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று கைது செய்துள்ளது.
பெருந்தொகை தங்கம்
நிட்டம்புவ பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய ஆண் பயணி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை 08.35 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸிற்கு சொந்தமான EK-650 விமானம் மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட மற்றைய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் சீதுவையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
பெண் கைது
இந்த விமானப் பயணியும், விமானப் பணிப்பெண்ணும் தனது கைப் பையில் வைத்திருந்த 116.6 கிராம் எடையுள்ள 80 தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
