கேலி கிண்டல்களை பொருட்படுத்த போவதில்லை-ஞானசார தேரர்
சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட வைபவத்தில் கலந்துக்கொண்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் கேலி, கிண்டல்களை எந்த வகையிலும் பொருட்படுத்த போவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
போதும் என்று நினைக்கும் போது நிறுத்தி விடுவார்கள்

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர், “எவரும் விமர்சிக்கலாம், கிண்டல்களை முன்வைக்கவும் முடியும். யார் அவற்றை பொருட்படுத்துவது?. போதும் என்று அவர்கள் நினைக்கும் போது நிறுத்தி விடுவார்கள்.
இந்த நாட்டு மக்களுக்கு கேலி செய்யவும் விமர்சிக்கவும் மட்டுமே தெரியும். அவற்றை நான் பொருட்படுத்துவதில்லை” எனக் கூறியுள்ளார்.
முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்த ஞானசார தேரர்

பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இனங்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வந்த ஞானசார தேரர், கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பில உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்துக்கொண்டார்.
இலங்கைக்கான சவுதி தூதுவரின் விசேட அழைப்புக்கு இணங்க அவர் அதில் கலந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னர் சமூக ஊடகங்களில் ஞானசார தேரருக்கு எதிராக விமர்சன ரீதியாகவும் கிண்டலாகவும் பதிவுகள் இடப்பட்டு அவை பகிரப்பட்டு வருகிறது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam