5ஆவது வருடமும் யாழ். இந்துக் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தினை தனதாக்கியுள்ளது
வடக்கு மாகாணமட்ட கூடைப்பந்தாட்ட போட்டியின் 17 மற்றும் 20 வயதுப்பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகளில்17 வயதுப்பிரிவில் தொடர்ச்சியாக 5ஆவது வருடமும் யாழ். இந்துக் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தினை தனதாக்கியுள்ளது.
குறித்த போட்டிகள் நேற்றைய தினம்(28) யாழ். இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்றுள்ளது.
கூடைப்பந்தாட்ட போட்டி
காலையில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு இறுதிப்போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி அணி களமிறங்கியுள்ளது.

போட்டியின் முடிவில் 56 : 33 என்ற என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி தொடர்ச்சியாக 5 வருடங்களாக மாகணாமட்ட சம்பியனாகி சிறப்பு வெற்றியை பதிவு செய்தது. அத்துடன், மாலையில் நடைபெற்ற 20 வயதுப்பிரிவு இறுதிப்போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி அணி களமிறங்கியுள்ளது.
மிக விறுவிறுப்பாக மேலதிக நேரம் வரையில் நடைபெற்ற போட்டியின் முடிவில் 68:67 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ். இந்து கல்லூரியின் 20 வயதுப்பிரிவு அணி 6 வருடங்களுக்கு பின் சம்பியனாகி வெற்றியை பதிவு செய்துள்ளது.

| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri