அதிரடியாக வெற்றியை தனதாக்கிய இந்திய அணி
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.
மழை காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட, இந்திய அணிக்கு 78 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
குறித்த இலக்கை இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில் அடைந்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய யஷஷ்வி ஜெய்ஸ்வால் 15 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை பெற்றார்.
தீக்சன, ஹசரங்க மற்றும் பதிரன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ரவி பிஷ்னோய் தெரிவு செய்யப்பட்டார்.
முதலாம் இணைப்பு
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் இரண்டாவது இருபதுக்கு20 போட்டி, மழை காரணமாக இரண்டாம் இன்னிங்க்ஸுக்கு 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டி இன்றையதினம் (28.07.2024) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ்
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 34 பந்துகளை எதிர்கொண்டு 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்திய அணி சார்பில் 4 ஓவர்களில் 26 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
8 ஓவர்கள்
இதற்கமைய, 162 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரில் 3 பந்துகளை 6 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது.

அதனைத் தொடர்ந்து, போட்டி 8 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இந்திய அணிக்கு 78 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

















ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam