முதல் போட்டியில் வெற்றியை தனதாக்கிய இந்திய அணி
இந்தியா (India) மற்றும் இலங்கை (Sri Lanka) அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு20 போட்டியில் இந்திய அணி 43 ஒட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டி இன்றையதினம் (27.07.2024) கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
பிரகாசித்த ஆரம்பம்
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 213 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பாக அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 26 பந்துகளுக்கு 58 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மதீச பதிரன (Matheesa Pathirana) 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
214 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பதும் நிசங்க (Pathum Nissanka) மற்றும் குசல் மெண்டிஸ் (Kusal Mendis) ஆகியோர் சிறப்பாக செயற்பட்டு முதல் விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
நடுவரிசை வீரர்கள்
குசல் மெண்டிஸ் 27 பந்துகளை எதிர்கொண்டு 45 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பதும் நிசங்க 79 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, வந்த வீரர்கள் பிரகாசிக்க தவற, நடுவரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரியான் பராக் 1.2 ஓவர்களில் 5 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |