இலங்கைக்கு எதிரான இருபதுக்கு20 போட்டியில் பங்கேற்கும் இந்திய உத்தேச அணி
இந்திய மற்றும் இலங்கை (India Vs Sri Lanka) அணிகளுக்கு இடையிலான முதல் இருபதுக்கு20 கிரிக்கட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி கண்டி (Kandy) - பல்லேகலையில் ஆரம்பமாகிறது
இருபதுக்கு20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமையால், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இதனால் இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயம் இந்த போட்டியின் மூலம் ஆரம்பமாகிறது. இந்த இருபதுக்கு20 தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் தலைவராக செயற்படுகிறார்.
விக்கெட் கீப்பராக பண்ட்
இந்தநிலையில், முதல் இருபதுக்கு20 முதல் போட்டியில் இந்திய அணியின் உத்தேச பதினொருவர் அணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இந்திய அணியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் செயல்படுவார்.
அவருக்கு ஜோடியாக அதிரடி இடது கை துடுப்பாட்ட வீரர் ஜெய்ஸ்வால் விளையாடுவார்.
மூன்றாவது வீரராக சூர்யகுமார் யாதவ் விளையாடுவார். நான்காவது இடத்தில் (Number four) விக்கெட் கீப்பராக ரிசப் பண்ட்க்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வொசிங்டன் சுந்தரின் வாய்ப்பு
ஐந்தாவது இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது ரிங்கு சிங் என இரண்டு வீரர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ரிசப் பன்ட் இடது கை துடுப்பாட்ட வீரராக இருப்பதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறாவது வீரராக அதிரடி சகலதுறை ஆட்ட வீரர் ஹர்திக் பாண்டியா விளையாடக்கூடும். ஏழாவது வீரராக அக்சர் பட்டேல் இடம் பெறுவார். 8வது வீரராக ரவி பிஸ்னோய் அணியில் இடம்பிடிப்பார்.
இதனையடுத்து, 9, 10 ,11 ஆகிய இடத்தில் மூன்று வேக பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள்.
இதில் முகமது சிராஜ், ஆர்ஸ்தீப் சிங், கலில் அகமது ஆகியோருக்கு இடம் கிடைக்கலாம். அணியில் அக்சர் பட்டேல் இருப்பதால் தமிழ் நாட்டின் வீரர் வொசிங்டன் சுந்தருக்கு இடம் கிடைப்பது கொஞ்சம் கடினம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |