இந்தியாவை வெற்றி கொள்ள இராணுவத்தின் உதவியை நாடிய இலங்கை கிரிக்கெட் அணி : புதிய வியூகம்
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு இராணுவ உயர் அதிகாரி, உளவள ஆலோசனை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடருக்காக இந்த விசேட உளவள ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
விசேட ஆலோசனை
இராணுவத்தின் யாழ்ப்பாண கட்டளைத் தளபதி எம்.சீ.பி. விக்ரமசிங்கவினால் இந்த விசேட ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
தேசபற்று மற்றும் அர்ப்பணிப்பு என்பன தொடர்பல் விசேட ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினரின் கோணத்திலிருந்து இந்த உளவள ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெற்றி பெறும் மனநிலையை எவ்வாறு தொடர்ச்சியாக பேணுவது என்பது குறித்து ஆலேசானை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கின் நிறைவில் கிரிக்கெட் வீரர்கள், இராணுவ அதிகாரியிடம் கேள்வி எழுப்பி தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
