2024 பாரீஸ் ஒலிம்பிக்கின் பின்னர் ஓய்வு : முதல் தர வீரரின் அறிவிப்பு
2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்டி மர்ரே(Andy Murray) அறிவித்துள்ளார்.
37 வயதான அவர் பாரிஸில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமது கடைசி டென்னிஸ் போட்டிக்காக பாரிஸூக்கு வந்துள்ளதாக மர்ரே எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை
2012 லண்டனில் இடம்பெற்ற ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரரை நேர் செட்களில் வீழ்த்தி அவர் தங்கம் வென்றார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், ரியோவில் அர்ஜென்டினாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை வீழ்த்தியதன் மூலம் இரண்டு ஒலிம்பிக் ஒற்றையர் பட்டங்களை வென்ற முதல் ஆண் டென்னிஸ் வீரராக மர்ரே பெருமை பெற்றார்.
மூன்று முறை கிராண்ட் ஸ்லாம் வென்ற மர்ரே, 2019 ஜனவரியில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்
இரண்டு முறை வெற்றி பெற்றதன் மூலம் மர்ரே விம்பிள்டன் செம்பியன் பட்டத்தையும் தனதாக்கிக்கொண்டார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |