பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள்
எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் நவம்பரில் பங்களாதேஷ் ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ கிரிக்கட் அணிகள் பாகிஸ்தானுக்கு (Pakistan) விஜயம் செய்கின்றன.
இதன்படி ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையான இரண்டு நான்கு நாள் ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் 'ஏ' அணிகள் களமிறங்குகின்றன.
ஐந்து போட்டிகள்
இதனையடுத்து ஆகஸ்ட் 23, 25 மற்றும் 27 ஆகிய திகதிகளில் மூன்று 50 ஓவர் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதேவேளை எதிர்வரும் நவம்பரில், இலங்கை ‘ஏ’ அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்குச் செல்கிறது.
இதன்போது இரண்டு, நான்கு நாள் ஆட்டங்கள் நவம்பர் 11-14 மற்றும் நவம்பர் 18-21 வரையிலும், 50 ஓவர் போட்டிகள் நவம்பர் 25, 27 மற்றும் 29 ஆகிய திகதிகளிலும் நடைபெறவுள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
