தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வவுனியா இளைஞன்
48 ஆவது தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் வடமாகாணத்தை பிரிநிதித்துவப்படுத்தி வவுனியா வடக்கு இளைஞன் தங்கப்பதக்கம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த குத்துச்சண்டை போட்டியானது கொழும்பு றொறின்ரன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது.
குத்துச்சண்டை போட்டி
குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த முத்தையா கிரிதரன் என்ற இளைஞன் தங்கப்பதக்கத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 63.5 தொடக்கம் 67 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டே குறித்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண தலைமை பயிறுவிப்பாளர் மு.நிக்சன் ரூபராஜ் தலைமையிலான அணியினர் ஒரு தங்கம், 02 வெள்ளி, 05 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இதில் குறித்த பயிற்றுவிப்பாளரின் பயிற்சியின் கீழான வவுனியா மாவட்ட குத்துச்சண்டை அணியினர் 01 தங்கம் மற்றும் 03 வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam