வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்களை தெளிவுப்படுத்திய ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸால் (P.S.M. Charles) தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக மாநாடு யாழ். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26.07.2024) நடைபெற்றுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடக மாநாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவனும் கலந்துக்கொண்டார்.
தெளிவுப்படுத்தப்பட்ட திட்டங்கள்
கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாட்டின் முன்னேற்றம், சிவில் பிரஜைகளின் காணி விடுவிப்பு, சூரிய மின்படல வீட்டுத்திட்டம், குடிநீர் விநியோக திட்டம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள், “உரித்து” செயற்றிட்டம், கல்வித்துறை, விவசாயம் மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள், சுகாதாரத்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு வலய (BOI) திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
