பாகிஸ்தானை தோற்கடித்த இலங்கை, இந்தியாவை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது
ஆசியக்கிண்ண இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், இலங்கை மகளிர் கிரிக்கட் அணித் தலைவி சாமரி அத்தபத்துவின் அரைச்சத உதவியுடன், இலங்கை அணி, பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தது.
முன்னதாக நேற்று (26.07.2024) இடம்பெற்ற முதல் அரையிறுதியில் நடப்பு செம்பியனான இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஸ் அணியை வீழ்த்தியது.
இந்தநிலையில், இந்திய மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையில் இறுதிப் போட்டி நாளை (28.07.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இலங்கை அணி வெற்றி
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 140 ஓட்டங்களை பெற்றது. இதில், முனீபா அலி 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 19.5 ஓவர்களில் 7 விக்கட் இழப்புக்கு 141 ஓட்டங்களை பெற்றது. இதில் சாமரி அத்தபத்து 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பாகிஸ்தானிய அணியின் பந்து வீச்சில் சாடியா இக்பால் 16 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |