வடக்கிற்கான விஜயம் மேற்கொண்ட சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வடக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயமானது இன்று (09) கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையை (Smart Classroom) திறந்து வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி இன்று தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி (13.06.2024) வரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு சஜித் விஜயம் செய்யவுள்ளார்.
தேர்தல் தொகுதிகள்
நாளையதினம் (10) பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைக்கவுள்ளார்.
எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் ஊர்காவற்துறை தொகுதி, கோப்பாய் தொகுதிக்கு விஜயம் மேற்கொண்டு 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார்.
மேலும், 13ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி் இரணைதீவு றோ. க. த. க ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 லட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென் சார்ல்ஸ் மகா வித்தியாலயம்
நவீன உலகின் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந் நாட்டின் இளைய தலைமுறையை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஸ்மார்ட் கணினி பயன்பாட்டில் தேர்ச்சி பெற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் சக்வச என்ற செயற்றிட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வருகை இன்று(09) சென் சார்ல்ஸ் மகா வித்தியாலயத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ , ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் உமா சந்திர பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
5 கணினிகளும் , 1 அச்சுப்பொறியும் , smart board உம் வழங்கப்பட்டதோடு புதிய ஸ்மார்ட் வகுப்பறையும் திறந்து வைக்கப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
செய்தி- கஜி
யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் பிரபஞ்ச தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 226ஆவது கட்டமாக 11 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்,யாழ் வைத்தீஸ்வரா கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ்
,யாழ்ப்பாண தொகுதி அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயேந்திரன்,நல்லூர் தொகுதி
அமைப்பாளர் அ .கிருபாகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |