ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: மூவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
வடக்கில் சேவையின் தேவை எனத் தெரிவித்து, ஆசிரியர்கள் கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் முன்வைக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மூவரை இன்றையதினம்(30.3.2026) விசாரணைக்கு வருமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் எழுத்து மூலமாக அழைப்பை விடுத்துள்ளது.
விசாரணைக்கு அழைப்பு
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர் ,மற்றும் பொதுச் சேவை ஆணை குழுவின் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் இடமாற்றத்தில் உள்ள நியாயத்தன்மை மற்றும் விதிமுறை மீறல்கள் குறித்து இந்த விசாரணையில் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.