வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுகிறதா..! வடக்கு ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்
அரசாங்கத்தால் வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை எனவும், சரியான முதலீட்டாளர்களை இனம் கண்டு அவர்களின் திட்டங்களுக்கு தேவையான காணிகளையே வழங்குவதாகவும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வடக்கில் 700 ஏக்கர் நிலம் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளித்த ஆளுநர், சிறீதரனின் கருத்தை நான் அறியாத நிலையில் அவருடைய கருத்து தொடர்பில் பதில் கூற முடியாது.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
