யு.என்.டி.பி. நிறுவன பிரதிநிதியுடன் வடக்கு ஆளுநர் கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பிலும், யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
உள்ளூராட்சி அமைப்புக்களை வலுப்படுத்தும் தமது வேலைத்திட்டம் தொடர்பாக விரிவாக வதிவிட பிரதிநிதியால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நிகழ் நிலைப்படுத்துவதன் (Online service) தேவைப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சாதகமான நிலைமைகள் தொடர்பிலும் குறிப்பிட்ட ஆளுநர் வடக்கு மாகாணத்திலும் அது நடைமுறை படுத்தப்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.
முக்கிய விடயங்கள்
கடந்த காலங்களில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் உட்பட பல்வேறு உதவிகளை யு.என்.டி.பி. நிறுவனமும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களும் வழங்கியமைக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்குரிய தேவைப்பாடுகளையும் ஆளுநர் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான விவசாயம் மற்றும் கடற்றொழில் பொருளாதார மேம்பாட்டுக்கான உதவிகளின் தேவைப்பாடுகளையும் ஆளுநர் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் தாம் கேட்டறிந்த விடயங்களை ஆளுநருடன் பகிர்ந்துகொண்ட யு.என்.டி.பி. வதிவிடப் பிரதிநிதி நுண்நிதிக் கடன்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையையும் ஆளுநரிடம் அவர் ஒப்படைத்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 



 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        