யாழ். மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த ஆளுநர்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (23) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
கலந்துரையாடல்
அத்துடன், ஆளுநர் நா.வேதநாயகன் , யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத்தும் யாழ். மாவட்டத்தில் பணிபுரிந்தமையை நினைவு கூர்ந்தார்.
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரைவில் சந்தித்துக் கலந்துரையாடுவோம் என கட்டளைத்தளபதி ஆளுநரிடம் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் யகம்பத் கடந்த வெள்ளிக்கிழமை (20.12.2024) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
