அடுத்த வருட அபிவிருத்தி திட்டங்கள் குறித்து வடக்கு ஆளுநர் வெளியிட்ட தகவல்
2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக் கணக்கு (vote on account) 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான 4 மாதங்களுக்குமான நடைமுறை, மூலதன செலவின ஒதுக்கீட்டு விவரம் குறித்து உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கறுப்புப் பட்டியலில் உள்ளடக்க வேண்டியவர்கள்
இந்நிலையில், கிடைக்கும் நிதியை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், நிதி ஆணைக்குழுவின் தெளிவான வழிகாட்டல்களுக்கு அமைவாக திட்டங்களைத் தயாரிக்குமாறு கோரினார்.
ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் திட்டங்களை தயாரிக்கும் பணிகளை நிறைவுறுத்துமாறு பிரதிப் பிரதம செயலர் (நிதி) எஸ்.குகதாசன் அறிவுறுத்தினார்.
பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், அடுத்த ஆண்டுக்குரிய மிகப் பெரிய திட்டங்களை விரைந்து ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒப்பந்தகாரர்கள் தொடர்பான பட்டியலை கைவசம் வைத்திருக்கவேண்டும் எனவும், கடந்த காலங்களில் ஒப்பந்தகாரர்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் அவர்களில் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்க வேண்டியவர்கள் தொடர்பான விவரங்களையும் தயாரித்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |