புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த வடக்கு மாகாண ஆளுநர்

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Erimalai Jan 22, 2026 06:44 AM GMT
Report

புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் எமது பிரதேசங்களில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்துள்ளார்.

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் நேற்று(21.01.2026) நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் - பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் - பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

முதலீடுகள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போர்ச் சூழல் காரணமாக கடந்த 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலம் 9 மாதங்களில் அடிப்படை உட்கட்டுமானங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 6.3 பில்லியன் ரூபா முதலீட்டில், அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலம் 30 மாதங்களில் இந்த தொழிற்சாலை முழுமையாக நிறுவப்பட எதிர்பார்க்கப்படுகின்றது.

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த வடக்கு மாகாண ஆளுநர் | Northern Governor Calls On Diaspora Investors

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, பரந்தன் மண் மீண்டும் தனது பழைய பெருமையை மீட்டெடுக்கும் ஒரு ஆரம்பப் புள்ளியில் நிற்கின்றது.

கடந்த 1954 இல் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கூட்டுத்தாபனமாக்கப்பட்ட இந்த நிறுவனம், நாட்டின் இரசாயனத் தேவையைப் பூர்த்தி செய்த ஒரு பாரிய அச்சாணியாகத் திகழ்ந்தது.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.

ஆனையிறவு உப்பளமாக இருக்கலாம், இன்று அடிக்கல் நடப்படும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையாக இருக்கலாம், இவை அனைத்தும் வடக்கின் பொருளாதாரத்தின் உயிர் நாடிகளாக பார்க்கப்படுகிறது. இவற்றை மீள இயக்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

கிளிநொச்சியில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்பு

கிளிநொச்சியில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்பு

மேலும், இந்த தொழிற்சாலை இயங்கிய காலத்தில், குளோரின், கொஸ்டிக் சோடா மற்றும் ஹைதரோ குளோரிக் அமிலம் போன்றவற்றை எமது மண்ணில், எமது மக்களின் உழைப்பிலேயே உற்பத்தி செய்தோம்.

ஆனால், கடந்த 40 வருடங்களாக இவற்றையெல்லாம் நாம் டொலர் கொடுத்து இறக்குமதி செய்து வருகிறோம். இன்று அந்த நிலைமை மாற்றியமைக்கப்படப் போகின்றது.

வேண்டுகோள்

இனிவரும் காலங்களில் எமது தேவை போக, எஞ்சியவற்றை ஏற்றுமதி செய்து டொலரை உழைக்கும் மையமாகப் பரந்தன் மாறப்போகின்றது.

எதிர்காலத்தில் இந்த தொழிற்சாலை அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக இயங்கவுள்ளது. இந்த விடத்தில் நான் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளுக்கு ஒர் பகிரங்க வேண்டுகோளை விடுக்கின்றேன்.

புலம்பெயர் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்த வடக்கு மாகாண ஆளுநர் | Northern Governor Calls On Diaspora Investors

நீங்கள் எமது மக்களின் அன்றாட நுகர்வுத் தேவைக்குப் பணம் அனுப்புவதை விட, இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். எத்தனையோ எம்மவர்கள் எமது மண்ணில் முதலீடு செய்யக் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கில் அமையவுள்ள மூன்று பாரிய முதலீட்டு வலயங்களில் ஒன்று இந்தப் பரந்தன் பிரதேசத்தில் அமையவுள்ளது.

இது எமது வடக்கு மாகாண இளையோருக்கு, குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்குப் பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் - பல மர்மங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் - பல மர்மங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

இந்த நிகழ்வில்,நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், கண்டாவளைப் பிரதேசச் செயலாளர் த.பிருந்தாகரன், கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ.வேளமாலிகிதன், முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர்கள், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.      

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US