கிளிநொச்சியில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்பு
கிளிநொச்சி - கல்மடுக்குளத்தின் கீழ் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(21.01.2026) இடம்பெற்றுள்ளது.
விசாரணை
குறித்த யானையானது ,பெரும்போக நெற் பயிர் செய்கையை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால், குறித்த பகுதியில் அனுமதியின்றி மின்சார வேலியை அமைத்து யானை ஒன்று இறப்பதற்கு காரணமாக அமைந்த குற்றச்சாட்டில் மின்சார வேலி அமைத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று( 22.01.2026) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan