மர்மமான முறையில் உயிரிழந்த நபர் - பல மர்மங்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு
களுத்துறை, இத்தேபான பகுதியில் தனியாக வசித்து வந்த 53 வயதுடைய நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலத்திற்கு அருகில் மரணத்திற்கு பயப்பட வேண்டாம் என்ற தலைப்பிலான சிறிய புத்தகம் மற்றும் வெற்று விஷ போத்தல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் விஜேசேன விமல் தசநாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராகும்.
பொலிஸாரின் விசாரணை
இவருக்கு 8 சகோதரர்கள் இருப்பதும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணமாகாத இவர் நீண்டகாலமாக வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இத்தேபான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாணக்க லசந்த தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டனர்.
இதன்போது, சமையலறை நுழைவாயிலில் அவர் விழுந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
அவரது வலது தோள்பட்டைக்குக் கீழே காயங்கள் காணப்பட்டதாகவும், இடது கையை விலங்குகள் கடித்ததற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக பரிசோதனை
உடல் நீல நிறமாக மாறியிருந்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மத்துகம மேலதிக நீதவான் புத்திக மல்தெனிய சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலம் களுத்துறை நாகொட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும், மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan