மனித உரிமைகள் தினத்தில் யாழில் காட்சிப்படுத்தப்பட்ட வடக்கின் மனித உரிமை மீறல்கள்(Photos)
இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை உரிமை மீறல்கள் சம்பவங்கள் தொடர்பில் யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பான காட்சிபடுத்தலும் குறித்த ஆர்பாட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை தினமான நேற்று(11.12.2023) யாழ்பாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக மேற்படி போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பெண்களிற்கு எதிரான வன்முறைகள்
குறிப்பக கவனயீர்ப்பு போராட்டத்தில் வலி வடக்கில் இராணுவத்தால் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டு மக்கள் 33வருடங்களாக இன்னும் அகதி முகாம்களிளும் உறவினர்கள் வீடுகளிலும் வசிக்கும் அவலம், இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் (PTA) இளைஞர்களின் நிலை, மற்றும் மன்னார் மாவட்டத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இடம் பெறும் கனிய மணல் அகழ்வு, காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டம், பெண்களிற்கு எதிரான வன்முறைகள் தொடர்பான காட்சிபடுத்தலும் இடம் பெற்றுள்ளது.
மேலும், மன்னார் மற்றும் முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அதன் விசாரனைகளின் காணப்படும் தாமதத்தை வெளிப்படுத்துமுகமாக மனித புதைகுழியும் இதன்போது காட்சிபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
