உக்ரைனை தாக்கிய வடகொரிய உற்பத்தி ஏவுகணைகள்
உக்ரைன் மீது தீவிர தாக்குதலை மேற்கொண்டுவரும் ரஷ்யா, தற்போது வடகொரியாவால் வழங்கப்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 60 ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது தற்போது செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்போரில் ரஷ்யாவிற்கு வடகொரியா துவக்கத்திலிருந்து வெடிகுண்டுகள், ஆயுதங்கள் மற்றும் இராணுவ வீரர்களை வழங்கி மிகப்பாரிய ஆதரவை வழங்கிவருகிறது.
விளாடிமிர் புடின்
2023 ஜூன் மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்துக்குப் பிறகு, இந்த ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த கால அறிக்கைகள் 50 இலட்சம் குண்டுகள் மற்றும் 100 குறைந்த short-range ballistic ஏவுகணைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றன.
வடகொரியாவின் தொழில்நுட்பம் பழமையானது என்பதால், குண்டுகளின் துல்லியம் குறைவாகவே உள்ளது என்று உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |