தென்கொரியாவிற்கு பலூன்கள மூலம் அனுப்பிவைக்கப்பட்ட குப்பைகள்
தென்கொரியா எல்லைக்குள் வடகொரியா பலூன்கள் மூலம் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவில் 260க்கும் மேற்பட்ட குப்பை பலூன்களை வடகொரியா வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பலூன்கள் சுமந்து கொண்டு வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்தாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது.
வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெளிவாக தெரிவதாகவும் மேலும், தென்கொரிய மக்களுக்கு எதிராக தீவிரமான பாதுகாப்பு மிரட்டல் எனவும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஏவுகணை சோதனை
இந்த மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம்தாழ்ந்த செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம் எனவும் தென்கொரியா தெரிவித்துள்ளது. எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசு நிர்வாகிகள், அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தென்கொரியாவின் எட்டு மாகாணங்களில் இவ்வாறான பலூன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தென்கொரிய அரசாங்கம் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.
அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது. இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவின் எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம் என குறிப்பிடப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |