இஸ்ரேலின் ஏவுகணை மீது எழுதப்பட்ட வாசகம் : எழுந்துள்ள சர்ச்சை
இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹாலே, அந்நாட்டு இராணுவ ஏவுகணை ஒன்றில் எழுதிய வாசகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஏவுகணையில் "அவர்கள் கதையை முடித்துவிடுங்கள்'' என அவர் எழுதும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
36 ஆயிரம் பேர் பலி
இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் படையினர் இடையே கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் திகதி முதல் காசா பகுதியில் போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாலஸ்தீனியர்கள் மீது தொடர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல் இராணுவம்.
இதுவரை 36 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சியைச் சேர்ந்த நிக்கிஹாலே 53 போட்டியிடுகிறார்.
இவர் சமீபத்தில் இஸ்ரேல் சென்றிருந்த நிலையில் அங்கு இராணுவ தளபாடங்களை பார்வையிட்டு அங்குள்ள ஏவுகணை ஒன்றில் "அவர்கள் கதையை முடித்துவிடுங்கள்'' என இஸ்ரேலுக்கு ஆதரவாக குறிப்பு எழுதி கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
