காசா தொடர்பில் இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு
பாலஸ்தீன காசா நகரை கைப்பற்றும் திட்டத்துக்கு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
ஹமாஸை தோற்கடிக்க அல்லது கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்க முடியாது என்று அமைச்சரவை அமைச்சர்களில் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நெத்தன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நெதன்யாகுவின் எச்சரிக்கை
இதன்படி ஐந்து அம்ச திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பை நிராயுதமாக்குவது, தம்மிடம் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் - உயிருடன் இருப்பவர்களையும் மற்றும் இறந்தவர்களையும் கையளிப்பது, காசாவை இராணுவமயமாக்குவது, காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கொண்டு வருவது மற்றும் ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகாரசபை அல்லாத ஒரு மாற்று சிவில் நிர்வாகத்தை காசாவில் நிறுவுதல் என்பன இந்த ஐந்து அம்சத் திட்டங்களில் அடங்குகின்றன.
நேற்றைய தினம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகக் ககடுமையாக எச்சரித்திருந்தார்.
அத்தகைய நடவடிக்கையை ஆதரிக்கலாமா வேண்டாமா என்பதை அமைச்சர்கள் இப்போது முடிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



